பிரபல இசையமைப்பாளர் எம்.கே.அர்ஜூனன் மரணம் - கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல்

கேரளாவின் பிரபல இசையமைப்பாளர் எம்.கே. அர்ஜுனன் திங்கள்கிழமை அதிகாலை காலமானார். அவருக்கு வயது 87.

Update: 2020-04-06 13:32 GMT
வயோதிகம் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அர்ஜூனன், கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர். 1968 ஆம் ஆண்டில் இசையமைப்பாளராக, கருதபவர்ணாமி என்ற திரைப்படத்தில் தமது இசை வாழ்க்கையைத் தொடங்கிய அவர், நாடகத்தைத் தவிர 500 க்கும் மேற்பட்ட பாடல்களுக்கும் 200-க்கும் மேற்பட்ட படங்களுக்கும் இசையமைத்தார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு, முதன் முதலில் கீ போர்ட் வாசிக்கும் வாய்ப்பை அர்ஜூனன் வழங்கியுள்ளார். இவரது இறப்பு குறித்து கருத்து கூறியுள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், சிறந்த இசைக் கலைஞரின் மறைவு இசைத் துறைக்கு மட்டுமல்ல, சமுதாயத்திற்கும் மிகப்பெரிய இழப்பு என குறிப்பிட்டுள்ளார். எம்.கே.அர்ஜூனனின் இறுதி சடங்கு கொச்சியில் நடைபெறுகிறது.


Tags:    

மேலும் செய்திகள்