மோடி அரசின் மீது ஒருவர் கூட ஊழல் குற்றச்சாட்டை வைக்கவில்லை - அமித்ஷா

பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள பிறந்தநாள் வாழ்த்து கட்டுரையில், மோடி தலைமையிலான குஜராத்தின் வளர்ச்சி தான் இந்திய அளவில் பாஜகவின் வளர்ச்சிக்கு சாதகமான வழிகளை உருவாக்கியதாக அமித்ஷா தெரிவித்துள்ளார்.

Update: 2019-09-17 04:34 GMT
பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள பிறந்தநாள் வாழ்த்து கட்டுரையில், மோடி தலைமையிலான குஜராத்தின் வளர்ச்சி தான் இந்திய அளவில் பாஜகவின் வளர்ச்சிக்கு சாதகமான வழிகளை உருவாக்கியதாக அமித்ஷா தெரிவித்துள்ளார். அதோடு, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியை ஆட்சியில் இருந்து வெளியேற்றியதோடு, மோடிக்கு உறுதியான ஆதரவையும் கிடைக்க செய்ததாக அவர் கூறியுள்ளார்.
 
ஏழைகளின் ஆசை, தேவை, எதிர்பார்ப்பு ஆகியவற்றை அரசு கவனிக்கிறது என்ற நம்பிக்கை அவர்களுக்கு வந்திருப்பதாகவும் அமித்ஷா தெரிவித்துள்ளார். பல்வேறு மேம்பாட்டு திட்டங்களுக்கு அரசு எவ்வளவோ பணத்தை செலவழித்தாலும், மோடி அரசின் மீது ஒருவர் கூட ஊழல் குற்றச்சாட்டை வைக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
  
மோடி அரசு, சமுதாயத்தின் மேம்பாட்டுக்காக பணியாற்றுவதோடு, உலக அரங்கில் இந்தியாவின் நிலையை உயர செய்துள்ளதாகவும் அமித்ஷா குறிப்பிட்டுள்ளார். இதற்கு மிக வலுவான சான்று, காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசின் நிலைப்பாட்டை உலகம் ஏற்றுக் கொண்டதும், பாகிஸ்தானின் நிலைப்பாட்டை கண்டித்ததும் ஆகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
 
இந்தியாவில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிப்பதற்கு அவர் அறைகூவல் விடுத்துள்ளதாகவும் அதிலும் விரைவில் சாதிப்போம் என்பது உறுதி எனவும் அமித்ஷா தெரிவித்துள்ளார். மனித குலத்துக்கும், பிறந்த மண்ணுக்காகவும், சேவை செய்ய அதிக சக்தியை பிரதமர் மோடிக்கு அளிக்க வேண்டும் என்று  பிறந்தநாளை முன்னிட்டு இறைவனை வேண்டுவதாகவும், உள்துறை அமைச்சர் அமித்ஷா தமது வாழ்த்து கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்