கேரளாவில் இளைஞர் ஆணவக் கொலை வழக்கு : 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

சாதி மாறி திருமணம் செய்ததால் ஆத்திரத்தில் தலித் கிறிஸ்துவ இளைஞரை கடத்தி கொலை செய்த வழக்கில், கேரளாவை சேர்ந்த 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

Update: 2019-08-28 08:58 GMT
சாதி மாறி திருமணம் செய்ததால் ஆத்திரத்தில் தலித் கிறிஸ்துவ இளைஞரை கடத்தி கொலை செய்த வழக்கில், கேரளாவை சேர்ந்த 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கோட்டயம் மன்னானம் பகுதியை சேர்ந்த 23 வயதான கெவின், கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த 21 வயதான நீனுவை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நீனுவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், கெவினை கடத்தி கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் போலீசார் காலம் கடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த வழக்கு கேரளாவில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த வழக்கில் கோட்டயம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கெவினை ஆணவக் கொலை செய்ததாக குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில், நீனுவின் சகோதரர் ஷானு சாக்கோ உள்ளிட்ட 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீனுவின் தந்தை சாக்கோ உள்ளிட்ட 4 பேர் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லாததால் அவர்களை​ விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்