நிதி ஆயோக் துணைத் தலைவர் எச்சரிக்கை - அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

இந்திய பொருளாதாரம் மந்த நிலையை சந்திக்க வாய்ப்புள்ளதாக நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் எச்சரித்துள்ளார்.

Update: 2019-08-23 14:50 GMT
இந்திய பொருளாதாரம் மந்த நிலையை சந்திக்க வாய்ப்புள்ளதாக நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் எச்சரித்துள்ளார். கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தேக்க நிலை நிலவுவதாக கூறியுள்ளதுடன், ஒட்டுமொத்த நிதித்துறையும் இதுபோன்றதொரு சுழலில் சிக்கியதில்லை என்று குறிப்பிட்டுள்ளார். அரசும், ரிசர்வ் வங்கியும் உடனடி நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கூறிய அவர், பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி அமலாக்கம் ஆகியவற்றுக்கு பின்னர் கடந்த 4 ஆண்டுகளாகவே ஒட்டுமொத்தமாக பொருளாதார நிலை மாறிவிட்டதாகவும், ராஜீவ்குமார் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்