பிரதமர் மோடி குறித்த இணையதள தொடருக்கு தடை : த​லைமை தேர்தல் ஆணையம் நடவடிக்கை

பிரதமர் மோடி குறித்த இணையதள தொடருக்கு தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-04-20 12:15 GMT
பிரதமர் மோடி குறித்த இணையதள தொடருக்கு தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இரண்டு இணையதள நிறுவனங்கள் இணைந்து, 'மோடி- சாதாரண மனிதனின் பயணம்' என்ற பொருளில், இணையதள தொடரை தயாரித்து உள்ளது. இம்மாத துவக்கத்தில், இந்தத் தொடர் வெளியாகி, ஐந்து பாகங்கள் முடிந்து விட்டன. தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி இத்தொடருக்கு தடை விதிக்க வேண்டும என தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், பிரதமர் மோடி குறித்த இணையதள தொடருக்கு தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்