தாய் கொலையில் மகன் கைது... சிறையில் அடைப்பு...

புதுச்சேரியில் தாயை கொலை செய்த மகன், போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2019-03-15 02:41 GMT
புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் கணவனை இழந்த நிலையில், மகன் அமலோற்பவனுடன் ஜெயமேரி என்பவர் வசித்து வந்தார். அவரது நடத்தையில் சந்தேகம் அடைந்த மகன், பெற்ற தாயை கத்தியால் குத்தி கொலை செய்தார். தாயின் உடலுடன் 7 நாள் தங்கியிருந்த அவர், இது குறித்து காவல் நிலையம் சென்று தாயை கொலை செய்ததைக் கூறினார். கடந்த 5ம் தேதி கொலை செய்த நிலையில், உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு  அனுப்பி வைத்தனர். இளைஞர்கள் பலருடன் தனது தாய் தவறான பழக்கம் வைத்திருந்ததாகவும் அதனால், கொலை செய்ததாகவும் அமலோற்பவன் வாக்குமூலம் அளித்துள்ளார். அவரை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்