நடன விடுதிகளுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியது உச்சநீதிமன்றம்

மும்பையில் நடன விடுதிகள் தொடங்க அம்மாநில அரசு விதித்த கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ள உச்சநீதிமன்றம், நடன விடுதிகளில் மதுவும், நடனமும் இணைந்தே பயணிக்கலாம் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-01-18 04:20 GMT
மும்பையில் நடன விடுதிகள் தொடங்க அம்மாநில அரசு விதித்த கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ள உச்சநீதிமன்றம், நடன விடுதிகளில் மதுவும், நடனமும் இணைந்தே பயணிக்கலாம் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில், கேளிக்கை நடன விடுதி தொடங்கவும், நடத்தவும், அம்மாநில அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது.இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. நடன விடுதிகளை முழுமையாக மூடி விட முடியாது என்றும், வேண்டுமென்றால் கட்டுப்பாடுகளை உருவாக்கி கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. நடன பெண்களுக்கு டிப்ஸ் கொடுப்பவர்கள்  பணத்தை வாரி இறைக்க கூடாது என்றும், நடன விடுதிகளில் சி.சி.டி.வி. கேமரா கட்டாயம் பொருத்த வேண்டும் என்ற விதியையும் உச்சநீதிமன்றம் தளர்த்தி தீர்ப்பளித்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்