ஐஐடியில் கைகழுவும் இடத்திலும் வகுப்பு பிரிவினை

சென்னை ஐஐடி உணவகத்தின் கை கழுவும் இடத்தில் சாதிய உணவு பாகுபாடு அடிப்படையில் அறிவிப்பு பிரசுரம் ஒட்டப்பட்ட சம்பவம் மாணவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2018-12-14 12:56 GMT
பல்வேறு உணவகங்கள் செயல்படும் அங்கு, 'ஹிமாலயன்'  என்ற உணவகத்தில் பிரிவினை நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. அதில், சைவம் சாப்பிடுவோர் மட்டுமே கைகழுவ வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பூண்டு, வெங்காயம் சேர்க்கப்பட்ட ஒரு பிரிவும், இவை சேர்க்கப்படாத ஒரு பிரிவும் என தனித்தனியாக அறிவிப்பு பிரசுரம் ஒட்டப்பட்டிருப்பது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விளக்கம் அளிக்க ஐஐடி நிர்வாகத்தினர் யாரும் முன்வரவில்லை. 
Tags:    

மேலும் செய்திகள்