டெல்லி காற்று மாசு : அபாய அளவைத் தாண்டியது

தலைநகர் டெல்லியில் காற்று மாசு அபாய அளவைத் தாண்டியுள்ளது.

Update: 2018-11-05 08:08 GMT
டெல்லியில் சுற்றுச்சூழலும், காற்றின் தரமும் மாசுபடுவது அதிகரித்து வருவதால் பலருக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. காற்று மாசைக் கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதிலிருந்து தப்பிக்க மக்கள் முகக்கவசம் அணிந்து செல்லத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இன்று காலை, டெல்லியில் காற்று மாசு காரணமாக எங்கும் புகை படலமாக காட்சி அளித்தது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றனர். நடைபயிற்சிக்கு செல்பவர்களும் கடும் அவதிக்குள்ளாகினர். 
Tags:    

மேலும் செய்திகள்