வருமான வரி செலுத்தும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68 சதவீதம் அதிகரிப்பு

வருமான வரி செலுத்தும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 68 சதவீதம் அதிகரித்துள்ள

Update: 2018-10-24 02:37 GMT
2014-15ஆம் ஆண்டில் 48 ஆயிரத்து 416 நபர்கள் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் காட்டியிருந்தார்கள். 2017-18ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 81 ஆயிரத்து 344 ஆக அதிகரித்துள்ளது. ரூபாய் நோட்டு நடவடிக்கைகளின் விளைவாக இதுவரை ஒழுங்காக கணக்கு காட்டாதவர்கள் பலரும், தற்போது வருமான வரி கணக்குகளை சமர்பிக்க துவங்கியிருக்கிறார்கள் என்று கருதப்படுகிறது. வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்தவர்கள் அனைவரின் மொத்த வருமானம் 2013-14இல் 26.92 லட்சம் கோடி ருபாயாக இருந்தது. 

இது 2017-18இல் 44.88 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.டி.பி எனப்படும் நாட்டின் மொத்த உற்பத்தியில் நேரடி வருமானத்தின் பங்கு 5.98 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் இது தான் மிக அதிகபட்ச விகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்