இந்தியாவின் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி மரணம்

இந்தியாவின் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரியான அன்னா ராஜம் மல்ஹோத்ரா நேற்று காலமானார்.

Update: 2018-09-18 08:54 GMT
இந்தியா சுதந்திரம்  பெற்ற பின்னர் இந்தியாவின் முதல் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டவர் அன்னா ராஜம் மல்ஹோத்ரா. கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பிறந்த இவர், தன் மேற்படிப்பை சென்னை பல்கலைக்கழகத்தில் முடித்துள்ளார். ரிசர்வ் வங்கியில் பணி புரிந்து வந்த மல்ஹோத்ராவை திருமணம் முடித்த அன்னா ராஜம் அதன்பிறகு சிவில் சர்வீஸ் தேர்வு முறையில் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வானார். பல மாநிலங்களில் ஏழு முதலமைச்சர்களுடன் பணியாற்றிய பெருமை பெற்றவர் இவர். 1982 ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளின் போது ராஜிவ் காந்தியுடன் இணைந்து அந்த நிகழ்வை திறம்பட நடத்திக் காட்டியவர். தமிழகத்தில் ராஜகோபாலச்சாரி முதலமைச்சராக இருந்த போதும் ஐஏஎஸ் அதிகாரியாக செயல்பட்டவர் அன்னா ராஜம்... 91 வயதை எட்டிய நிலையில் டெல்லியில் அவர் நேற்று உயிரிழந்தார். அவரது உடலுக்கு அதிகாரிகள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்