வீடு தேடி வரும் அஞ்சலக வங்கி சேவை - பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

டெல்லியில் உள்ள தால்கடோரா அரங்கில் நடைபெற்ற விழாவில், இந்த அஞ்சலக வங்கி சேவையை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.

Update: 2018-09-01 13:04 GMT
டெல்லியில் உள்ள தால்கடோரா அரங்கில் நடைபெற்ற விழாவில்,  இந்த அஞ்சலக வங்கி சேவையை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். இந்த விழாவில், சுமார் 50 ஆயிரம் கணக்குகள் தொடங்கப்பட்டன. 

நாட்டில் உள்ள ஒன்றரை லட்சம் அஞ்சலக கிளைகளும் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த வங்கியுடன் இணைக்கப்பட உள்ளன. விழாவில் பேசிய பிரதமர் மோடி, அஞ்சலக வங்கி சேவையை நாட்டின் மூலை, முடுக்கில் எல்லாம் கொண்டு செல்ல உள்ளதாக கூறினார். 

இதன் மூலம், ஒவ்வொரு வீட்டுவாசலிலும் அஞ்சலக வங்கி சேவை கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, 2014- ஆம் ஆண்டிற்கு முன்னர், வங்கிகளில் கடன் பெற்று திரும்ப செலுத்தாத, 12 பெரு முதலாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்