கலவரம் தொடர்பாக 248 பேர் கைது - தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா

கலவரம் தொடர்பாக 248 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா தெரிவித்துள்ளார்

Update: 2018-06-17 06:56 GMT
தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற கலவரம் தொடர்பாக இதுவரை  243 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். தகுந்த ஆதாரத்தின் அடிப்படையில் கலவரத்தில் ஈடுபட்ட 248 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பெண்கள், குழந்தைகள் யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் முரளி ரம்பா கூறினார்.

தூத்துக்குடியில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் 
வீண் வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய முரளி ரம்பா,  தூத்துக்குடி கலவரத்தில் 331 அரசு மற்றும் பொது சொத்துக்கள் சேதம் அடைந்ததாகவும் அதன் மதிப்பு 15 கோடியே 67 லட்சம் ரூபாய் எனவும் தெரிவித்தார்

Tags:    

மேலும் செய்திகள்