'காட்ஸில்லா' அறிமுகமாகி 70 ஆண்டுகள் நிறைவு... டோக்கியோ பெருநகர அரசுக் கட்டடத்தில் ஒளிர்ந்த படம்

Update: 2024-04-28 05:44 GMT

"Godzilla" எனும் கற்பனைக் கதாபாத்திரம் அறிமுகமாகி 70 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதமாக ஜப்பானின் டோக்கியோ பெருநகர அரசுக் கட்டடத்தில் "Godzilla"வின் படம் ஒளிர வைக்கப்பட்டது. "Godzilla" கதாபாத்திரம் 1954ல் இஷிரோ ஹோண்டா இயக்கிய திரைப்படத்தில் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. இன்றளவும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து ரசிகர்களையும் கவர்ந்த கற்பனைக் கதாபாத்திரமான "Godzilla"வை வைத்து கல்லா கட்டும் விதமாக ஏராளமான திரைப்படங்கள் வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்