விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள 'வீர தீர சூரன்' சிறப்பு வீடியோ காட்சியை வெளியிட்ட படக்குழு

Update: 2024-04-18 13:49 GMT

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள 'வீர தீர சூரன்' படத்தின் சிறப்பு வீடியோ காட்சி வெளியிடப்பட்டு உள்ளது. 'சித்தா' பட இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள நடிகர் விக்ரமின் 62-வது படத்துக்கு 'வீர தீர சூரன்' என தலைப்பிடப்பட்டுள்ளது. படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இந்நிலையில் விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் ஸ்பெஷல் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் விக்ரம் துப்பாக்கியால் சுடும் காட்சிகள் மற்றும் தோற்றம் கவனிக்க வைத்துள்ளது. படத்தின் டைட்டிலில் இரண்டாம் பாகம் என குறிப்பிடப்பட்டுள்ளதால், இதன் முந்தைய பாகம் அடுத்து வெளியாகும் என தெரிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்