சலீம் பட இயக்குநரின் 'அல்லா மாலிக்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு

சலீம் திரைப்பட இயக்குநரின் புதிய படத்தின் தலைப்பின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது.

Update: 2022-04-18 10:11 GMT
சலீம் திரைப்பட இயக்குநரின் புதிய படத்தின் தலைப்பின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. விஜய் ஆண்டனி நடிப்பில் நிர்மல் குமார் இயக்கத்தில் வெளியான சலீம் திரைப்படம், ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. விஜய் ஆண்டனியை ஆக்சன் ஹீரோவாகவும் நிலை நிறுத்தியது. இந்நிலையில், அல்லா மாலிக் எனும் புதிய படத்தை நிர்மல் குமார் இயக்க உள்ளார். இந்த படத்தின் தலைப்பு முன்னோட்டத்தை தயாரிப்பாளர் தாணு, நடிகர் சசிகுமார் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்