சிவாஜி, ரஜினி பட தயாரிப்பாளர் எம்.முத்துராமன் காலமானார் - திரையுலகினர் இரங்கல்

தமிழ் திரைப்பட மூத்த தயாரிப்பாளர் எம்.முத்துராமன் உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்.

Update: 2022-01-11 05:31 GMT
தமிழ் திரைப்பட மூத்த தயாரிப்பாளர் எம்.முத்துராமன் உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 83. ரஜினிகாந்தின் முதல் கலர் திரைப்படமான ஆயிரம் ஜென்மங்கள் படத்தை தயாரித்தவர் எம்.முத்துராமன். சிவாஜி, பிரபு, கார்த்திக் என முன்னணி நட்சத்திரங்களை வைத்து ராஜமரியாதை, மூடுமந்திரம், நலந்தானா உட்பட 26 படங்களை தயாரித்துள்ளார். சென்னை தியாகராயர் நகரில் வசித்து வந்த அவர், அதிகாலை 3.30 மணியளவில் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்