நெட்ஃபிளிக்ஸின் அடுத்த தயாரிப்பில் சமந்தா? தகவல் உண்மையில்லை என விளக்கம்

நெட்ஃபிளிக்ஸ் தயாரிக்கும் பன்மொழி வெப்சீரிஸ் ஒன்றில், சமந்தா நடிக்க இருப்பதாக வெளியான தகவல் உண்மையில்லை என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-06-17 07:21 GMT
நெட்ஃபிளிக்ஸின் அடுத்த தயாரிப்பில் சமந்தா? தகவல் உண்மையில்லை என விளக்கம் 

நெட்ஃபிளிக்ஸ் தயாரிக்கும் பன்மொழி வெப்சீரிஸ் ஒன்றில், சமந்தா நடிக்க இருப்பதாக வெளியான தகவல் உண்மையில்லை என, தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜ், டிகே ஆகியோர் இயக்கத்தில் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான "தி ஃபேமிலி மேன்" வெப்சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து சமந்தா நடிப்பில் வெளியான இரண்டாவது சீசன், சர்ச்சையை கிளப்பிருப்பிருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனிடையே, நெட்ஃபிளிக்ஸ் தயாரிக்கும் பன்மொழி இணைய தொடர் ஒன்றில், சமந்தா நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், இந்த தகவல் உண்மையில்லை என, நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Tags:    

மேலும் செய்திகள்