"கொண்டாடப்பட வேண்டிய படம் கர்ணன்" - உதயநிதி ஸ்டாலின் டுவிட்டர் பதிவு

கர்ணன் படம் ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும், மறுக்கப்பட்ட அவர்களின் உரிமையையும் மிகைப்படுத்துதல் இன்றி எடுத்துள்ள படம் எனவும், இது கொண்டாடப்பட வேண்டிய படம் எனவும், உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2021-04-14 05:29 GMT
கர்ணன் படம் ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும், மறுக்கப்பட்ட அவர்களின் உரிமையையும் மிகைப்படுத்துதல் இன்றி எடுத்துள்ள படம் எனவும், இது கொண்டாடப்பட வேண்டிய படம் எனவும், உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டர் பதிவில், 1995இல் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில், அச்சம்பவம் 1997ல் நடந்ததாக காட்டப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள உதயநிதி ஸ்டாலின், இந்த விஷயத்தை தயாரிப்பாளர், இயக்குநரிடம் சுட்டிக்காட்டியதாகவும், அந்த தவறை இரு தினங்களில் சரி செய்து விடுவதாக அவர்கள் உறுதியளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.  
Tags:    

மேலும் செய்திகள்