நடிகர் சோனு சூட்டின் அசத்தலான வீடியோ - அந்தரத்தில் நின்றபடி உடற்பயிற்சி
கொரோனா காலத்தில், பல்வேறு தரப்பு மக்களுக்கு உதவிகள் செய்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் சோனு சூட்.;
இவர் தற்போது பதிவிட்டுள்ள உடற்பயிற்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பக்கவாட்டில் உள்ள கம்பியை கைகளால் பிடித்தபடி கால்களை மேலே தூக்கியவாறு உள்ள சோனு சூட்டின் இந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.