எந்திரன் கதை வழக்கு - ஷங்கர் மனு தள்ளுபடி

எந்திரன் கதைத் திருட்டு என தொடரப்பட்ட வழக்கில், இயக்குனர் சங்கரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

Update: 2020-10-12 10:30 GMT
2010ஆம் ஆண்டு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியானது எந்திரன் திரைப்படம். ஆனால், 2007ஆம் ஆண்டு தான் எழுதி வெளியான ஜூகிபா கதையைத் திருடியே, இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்ததாகவும், இயக்குனர் சங்கர்  மீது ஆரூர் தமிழ்நாடன் என்பவர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இதுதொடர்பான மேல்முறையீட்டில், படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறனை விடுவித்த  சென்னை உயர்நீதிமன்றம், இயக்குனர் சங்கர் மீது காப்புரிமை சட்டத்தின் கீழ் விசாரணை நடத்த, எழும்பூர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இயக்குனர் சங்கர் செய்த மேல்முறையீட்டு மனு, நீதிபதி ரோகின்டன் நரிமன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள், இயக்குனர் சங்கரின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதன்மூலம், இயக்குனர் சங்கர் மீதான வழக்கில், எழும்பூர் நீதிமன்ற விசாரணைக்கு தடையில்லை என்பது உறுதியாகிறது


Tags:    

மேலும் செய்திகள்