நடிகை வனிதா விஜயகுமார் திருமணம் குறித்த சர்ச்சை கருத்து - டிவிட்டரில் பிரபல நடிகைகள் மோதல்

சமூக வலைதளத்தில், வனிதா விஜயகுமாரின் 3 வது திருமணம் குறித்து நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் விமர்சித்ததால், இருவர் இடையே மோதல் முற்றியுள்ளது.

Update: 2020-06-30 08:33 GMT
பிரபல திரைப்பட நடிகை வனிதா விஜயகுமார் கடந்த 27 ஆம் தேதி பீட்டர் பால் என்பவரை, 3 வதாக  திருமணம் செய்து கொண்டார். கடந்த 27 ஆம் தேதி நடந்த இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பீட்டர் பாலின் முதல் மனைவி, போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ள லட்சுமி ராமகிருஷ்ணன், ஏற்கனவே திருமணம் ஆகி விவகாரத்து பெறாமல் உள்ள நபரை, படித்த, புகழ்மிக்க அனுபவம் வாய்ந்த பெண் எப்படி திருமணம் செய்தார் என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலடியாக வனிதா விஜயகுமார்,  இது பொது பிரச்சனை இல்லை என்றும், தொலைக்காட்சி நிகழ்ச்சி அல்ல என்றும், டிவிட்டரில் பதில் அளித்துள்ளார். மேலும் இந்த பிரச்சனையிலிருந்து தள்ளியே இருக்குமாறும் வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார். 


Tags:    

மேலும் செய்திகள்