விளையாட்டு திருவிழா - (04.10.2018) மே. இ.தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் - புதிய சாதனை படைத்த பிரித்வி ஷா
பதிவு : அக்டோபர் 04, 2018, 10:29 PM
விளையாட்டு திருவிழா - (04.10.2018) வட சென்னையின் அடையாளம் கால்பந்து
மே. இ.தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் - புதிய சாதனை படைத்த பிரித்வி ஷா

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய 18 வயதே ஆன இந்திய வீரர் பிரித்வி ஷா சதம் விளாசி சாதனை படைத்தார். ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய, கே.எல். ராகுல் டக்-அவுட் ஆனார். தனது முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய இந்திய அணியின் இளம் வீரர் ப்ரித்வி ஷா, சதம் அடித்து அசத்தியுள்ளார். இதன் மூலம் சச்சினுக்கு பிறகு சதம் விளாசிய இளம் இந்திய வீரர் என்ற பெருமையை பிரித்வி ஷா பெற்றார். மேலும் ரஞ்சி கோப்பை, துலிப் கோப்பை, சர்வதே டெஸ்ட் என களமிறங்கிய முதல் போட்டியிலேயே சதம் விளாசிய ஒரே இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். பிரித்திவி ஷா 134 ரன்களுக்கும், புஜாரா 86 ரன்களுக்கும் ஆட்டமிழக்க , கேப்டன் கோலி அரைசதம் கடந்தார். ரஹானே 41 ரன்களில் வெளியேற, ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 364ரன்கள் எடுத்துள்ளது. கோலி 72 ரன்களுடனும், ரிஷப் பந்த் 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 


வட சென்னையின் அடையாளம் கால்பந்து

சென்னையின் அடையாளமாகவும், உழைப்பின் அடையாளமாகவும்  விளங்குவது வடசென்னை தான். ஆனால் வட சென்னையின் அடையாளம் திரைப்படத்தில் வருவது போல் அடி தடிகள் அல்ல, கால்பந்து விளையாட்டு தான். வியாசர்பாடி இளைஞர்களை  கல்வியிலும், ஒழுக்கத்திலும் மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம்கொண்ட தங்கராஜ், உமாபதி, சுரேஷ் ஆகிய மூவரும் தங்களுக்கு தெரிந்த கால்பந்தாட்டத்தை அதற்கு கருவியாக பயன்படுத்தி வருகிறார்கள். கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் வியாசர்பாடி முல்லை நகரின் கால்பந்தாட்ட மைதானத்தில் இலவச பயிற்சி அளித்து வருகின்றனர். 
ஆண்களோடு இளம்பெண்களும், சிறுமிகளும் ஆர்வமுடன் கால்பந்தாட்ட பயிற்சியில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். டவுசர்களை அணிந்து விளையாட தொடக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்கள் தற்போது தங்களது திறமையை கண்டு வியப்பதாக கூறுகிறார் கல்லூரி மாணவி பீமாபாய். 

5வது சீசன் ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி


ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் டெல்லி டைனமோஸ் அணியை எதிர்த்து புனே சிட்டி அணி விளையாடியது. டெல்லியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 4 ஆவது நிமிடத்திலேயே  புனே அணிக்கு கோல் அடிக்க கிடைத்த வாய்ப்பை நழுவவிட்டது. இதே போன்று ஆட்டத்தின் 16 ஆவது நிமிடத்திலும், 20 ஆவது நிமிடத்திலும் டெல்லி அணியினருக்கு கோல் அடிக்க கிடைத்த வாய்ப்பை  தவறவிட்டனர். 
ஆட்டம் விறுவிறுப்பில்லாமல் இருந்தபோது டெல்லி அணியின் வீரர் ராணா கராமி மைதானத்தின் நடுவில் இருந்து பந்தை தட்டிவிட்டு நேராக கோல் கீப்பருக்கு அடித்தார். இதை எதிர்பார்க்காத  கோல் கீப்பர் செய்வதறியாது திகைத்து நின்றபோது அட்டகாசமாக கோல் விழுந்தது. இதையடுத்து முதல் பாதி ஆட்டத்தில் டெல்லி அணி 1 கோல் அடித்து முன்னிலை பெற்றிருந்தது. இரண்டாவது பாதியில் 88 ஆவது நிமிடத்தில் புனே அணியின் டிகோ காரஸ் வெற்றிகரமா ஒரு கோல் அடித்தார். இதையடுத்து டெல்லி டைனமோஸ் மற்றும் புனே சிட்டி இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது.


தொடர்புடைய நிகழ்ச்சிகள்

10.30 காட்சி - 23.09.2018

10.30 காட்சி - 23.09.2018

425 views

ரொக்கம் (07/09/2018)

ரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..

305 views

குரு

ஆசிரியர்கள் முன் உள்ள சவால்கள், கடமைகள்... நல்ல ஆசிரியருக்கான தகுதிகள்... நிபுணர்களின் கருத்து... பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சிக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்..

181 views

பிற நிகழ்ச்சிகள்

விளையாட்டு திருவிழா - (14.01.2019) : இந்தியா ஆஸி நாளை 2வது ஒருநாள் போட்டி

விளையாட்டு திருவிழா - (14.01.2019) : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர்

92 views

விளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஒருநாள் கிரிக்கெட் நாளை தொடக்கம் : டெஸ்ட் தோல்விக்கு பழி தீர்க்குமா ஆஸி?

விளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோர் விளையாட பி.சி.சி.ஐ. தடை

70 views

விளையாட்டு திருவிழா - (10.01.2019) : இந்தியா Vs ஆஸி. ஒருநாள் போட்டி : நாளை மறுநாள் சிட்னியில் தொடக்கம்

விளையாட்டு திருவிழா - (10.01.2019) : ஆசிய கோப்பை கால்பந்து தொடர்: இந்தியா Vs யு.ஏ.இ. இன்று மோதல்

37 views

விளையாட்டு திருவிழா - (09.01.2019) : இந்திய வீரர்களின் செயல்பாடு எப்படி?

விளையாட்டு திருவிழா - (09.01.2019) : இந்தியாவிலேயே நடைபெறுகிறது ஐ.பி.எல் போட்டி

36 views

விளையாட்டு திருவிழா - (08.01.2019) : டெஸ்ட் தரவரிசை புஜாராவுக்கு 3வது இடம்

விளையாட்டு திருவிழா - (08.01.2019) : புதிய உச்சம் தொட்ட ரிஷப் பண்ட்

27 views

விளையாட்டு திருவிழா - (07.01.2019) : ஆஸி. மண்ணில் இந்தியா வரலாற்று சாதனை

விளையாட்டு திருவிழா - (07.01.2019) : டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றியது

31 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.