விளையாட்டு திருவிழா - 03.10.2018 - இந்தியா Vs மே.இ. தீவுகள் - நாளை முதல் டெஸ்ட்

விளையாட்டு திருவிழா - 03.10.2018 - திகில் நிறைந்த "பஞ்சி ஜம்பிங்" விளையாட்டு
விளையாட்டு திருவிழா - 03.10.2018 - இந்தியா Vs மே.இ. தீவுகள் - நாளை முதல் டெஸ்ட்
x
இந்தியா Vs மே.இ. தீவுகள் - நாளை முதல் டெஸ்ட்

2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்க இந்தியாவுக்கு மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி ராஜ்காட்டில் நாளை தொடங்குகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வீரர்கள் , இந்த தொடருக்காக தீவிரமாக தயாராகி வருகின்றனர்.  நட்சத்திர வீரர்கள் ஷிகர் தவான், முரளி விஜய் ஆகியோர் இந்த தொடரிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். காயம் காரணமாக இஷாந்த் சர்மா இந்த தொடரில் இடம்பெறவில்லை. இந்த தொடரில் பிரித்திவி ஷா, மாயங் அகர்வால், முகமது சிராஜ் ஆகிய இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.  இந்த தொடரில் இளம் வீரர்கள் எவ்வாறு செயல்பட்டு, இந்திய அணியில் நிரந்தர இடம் பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழந்துள்ளது. விக்கெட் கிப்பராக இந்திய மண்ணில் முதல் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த் விளையாட உள்ளார். மேலும் நடுவரிசையில் ஹனுமா விஹாரி நரந்தர இடம் பிடிப்பாரா என்று கேள்வி எழுந்துள்ளது. பார்மில் இல்லாத ரஹானே இந்த தொடரில் ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.  இல்லையேனில் அவர் இடத்திறகு வேறு ஒரு வீரர் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.  அடுத்த மாதம் ஆஸ்திரேலியவுக்கு இந்திய அணி டெஸ்ட் தொடரில் பங்கேற்க செல்கிறது. அந்த தொடரில் யார் இடம்பெறுவார்கள் என்பதற்கான பதில் மேற்கிந்திந்தியத் தீவுகளுக்கான டெஸ்ட் தொடரிலே தெரிந்துவிடும். 

நாளை களம் காணுகிறார் பிரித்திவி ஷா

பிரித்திவி ஷா இந்திய அணியின் நாளைய நம்பிக்கை நட்சத்திரம், 18 வயதான இவர் மேற்கிந்தியத தீவுகளுக்கு எதிரான நாளை முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக முதல் முறையாக களமிறங்குகிறார். டிராவிட்டின் பயிற்சி பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட கத்தி தான் பிரித்திவி ஷா, 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இந்திய அணியில் கேப்டன் பதவியை ஏற்று, உலகக் கோப்பையை வென்று தந்தவர். உள்ளூர் கிரிக்கெட்டில் 14 டெஸ்ட் போட்டியில் பங்கேற்றுள்ள பிரித்திவி ஷா 7 சதங்கள், 5 அரைசதங்கள குவித்துள்ளார். இந்திய ஏ அணியிலும் இடம்பெற்ற இவர் , அந்நிய மண்ணிலும் சதம் விளாசி இருக்கிறார். இங்கிலாந்து தொடரிலே வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் பிரித்திவி ஷாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. 
வயது குறைவாக இருப்பதால் வாய்ப்பு தராமல் இருக்கக் கூடாது என்று சச்சின் தேர்வுக்குழுவினருக்கு சில நாட்களுக்கு முன் அறிவுரை கூறியிருந்தார். சச்சின், விராட் கோலிக்கு போல் பிரித்திவி ஷாவும் சாதிப்பார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. முதல் முறையாக இந்தியா எந்த வீரர்களை களமிறக்கப்போகிறோம் என்று முன் கூட்டியே அறிவித்துள்ளது. அதில் ஹனுமா விஹாரிக்கு நடுவரிசையில் வாய்ப்பு இல்லை. ஆனால் 3 சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குவார்களா இல்லை 2 சூழ்ற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குவார்களா என்று போட்டி தொடங்குவதற்கு முன்பே தெரிந்துவிடும். 

திகில் நிறைந்த "பஞ்சி ஜம்பிங்" விளையாட்டு - ஜேம்ஸ் பாண்ட் முதல் விஜய் வரை செய்த சாகசம்

விளையாட்டில் ஈடுபடுவோரை மட்டுமல்ல.. பார்ப்போரையும் திகிலூட்டும் விளையாட்டாக திகழ்கிறது  bungee jumping..சாகச விளையாட்டுக்களில் ஒன்று 'பங்கீ ஜம்பிங்', மிக உயர்ந்த இடத்தில் இருந்து உடலில் கயிரைக் கட்டிக்கொண்டு பள்ளத்தில் குதிக்கும் விளையாட்டு இதுவாகும். உயர்ந்த கட்டிடம், பாலம், மலை உச்சி தான் என்றில்லை.. விமானத்தில் இருந்தும் கூட இதுபோல குதிக்கிறார்கள். இந்த கயிறு மீள் தன்மை கொண்டதாக இருக்கிறது. 1979ல், முதன் முதலாக பங்கீ ஜம்பிங் விளையாட்டில், இங்கிலாந்தை சேர்ந்த டேவிட் கிர்கே மற்றும் சைமன் ஆகியோர் ஈடுபட்டனர்.
ஆபத்தான விளையாட்டில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட இவர்கள், பின்னர் அமெரிக்காவின் தட்ஸ் இன்கிரிடியபில் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் உலகிற்கு இந்த திகில் விளையாட்டை அறிமுகம் செய்தனர். தென் ஆப்பிக்காவில் உள்ள Bloukrans பாலம் உலகின் மிக உயர்ந்த பங்கீ பாலமாக திகழ்கிறது.2005 ஆம் ஆண்டு  ஹக்கேட் என்பவர் 233 மீட்டரில் இருந்து குதித்ததே, உலகின் மிக உயர்ந்த பங்கீ ஜம்பாக இன்றளவும் கருதப்படுகிறது. 1990 களில் தொலைக்காட்சி நிகழ்ச்சி சார்பில் இந்த விளையாட்டுபோட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. கோல்டன் ஐ என்ற படத்தின் ஆரம்ப காட்சியில், ஜேம்ஸ் பாண்ட் ஒரு அணையில் இருந்து பங்கீ ஜம்பிங் செய்யும் காட்சி அன்றைய காலத்தில் பரபரப்பாக பேசபட்டது.

5வது சீசன் ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்

5வது சீசன் இந்தியன் சூப்பர் லீக் 4 ஆவது போட்டியில் மும்பை சிட்டி எஃப்சி அணியும், ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியும் மோதுதின. சொந்த மண்ணில் களம் கண்ட மும்பை அணி மந்தமாக ஆடியது. ஆனால் ஜாம்ஷெட்பூர் வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடினர். ஆட்டத்தின் 28வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் வீரர் மரியோ முதல் கோலை அடித்தார். இதனால் முதல் பாதியில் ஜாம்ஷெட்பூர் 1 - 0 என்ற கோல் கணக்கில் மட்டுமே முன்னிலை பெற முடிந்தது. 2வது பாதியில் மும்பை வீரர்கள் விறுவிறுப்பு  காட்டினாலும் கோல் மட்டும் விழவில்லை. வேகம் காட்டியதன் பலனாக 76வது நிமிடத்தில் மும்பை வீரர் முகமது ரஃபீக் கோல் அடித்தார். ஆனால் அடுத்த நொடியே அது ஆஃப் சைடு என அறிவித்து கோலை நடுவர் நிராகரித்தார். 84 வது நிமிடத்தில் இதே போல மும்பை அடித்த இன்னும் ஒரு கோல் ஆஃப் சைடு என நிராகரிக்கப்பட்டது. இதனால் மும்பை வீரர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இதன் பின்னும் மும்பை அணியின் கோல் முயற்சிகளை ஜாம்ஷெட்பூர் கோல் கீப்பர் அட்டகாசமாக தடுத்து நிறுத்தினார். இறுதி வரை மும்பையால் கோல் போட முடியவில்லை. கடைசி நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் மேலும் ஒரு கோல் அடித்தது. இதனால் ஜாம்ஷெட்பூர் 2 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

Next Story

மேலும் செய்திகள்