"கருப்பின அமெரிக்கர்களை ஏமாற்றி வருபவர் ஜோ பைடன்" - தேர்தல் பிரசார கூட்டத்தில் அதிபர் டிரம்ப் சரமாரி குற்றச்சாட்டு

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் கருப்பின அமெரிக்கர்களை ஏமாற்றி வருவதாக தற்போதைய அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கருப்பின அமெரிக்கர்களை ஏமாற்றி வருபவர் ஜோ பைடன் - தேர்தல் பிரசார கூட்டத்தில் அதிபர் டிரம்ப் சரமாரி குற்றச்சாட்டு
x
அமெரிக்காவில் அதிபர் தேர்தலின் இறுதி கட்ட பிரசாரம் சூடு பிடித்துள்ளது. விஸ்கான்சின் மாகாணத்தில், அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரசாரம் மேற்கொண்டார். இந்த பிரசாரத்தில், ஆதரவாளர்களிடையே உரையாற்றிய அவர், ஜோ பைடன் உடன் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது துரதிர்ஷ்டவசமானது என்றார். ஜோ பைடன் உடன் தேர்தலில் போட்டியிடும் சூழல் உருவானது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அதிபர் டிரம்ப் கூறினார். விஸ்கான்சின் மாகாணத்தின் வாக்குகளை, பெற, ஜோ பைடனுக்கு தகுதியில்லை என்றும், அந்த மாநில தொழிலாளர்களின் முதுகில் கத்தியால் குத்தியவர் என்றும் புகார் கூறினார். கருப்பின அமெரிக்கர்களை, ஜோ பைடன் தொடர்ந்து ஏமாற்றி வருவதாகவும், பைடன் அதிபரானால், வரிகளை உயர்த்துவார் என்றும், அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டினார். 


Next Story

மேலும் செய்திகள்