ரஷ்யாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு கூட்டம் - இந்தியா- சீனா பாதுகாப்பு துறை அமைச்சர்கள் சந்திப்பு

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் லடாக் மோதலுக்கு மத்தியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை, சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் சந்தித்து பேசினார்.
ரஷ்யாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு கூட்டம் - இந்தியா- சீனா பாதுகாப்பு துறை அமைச்சர்கள் சந்திப்பு
x
இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள்  பங்கேற்கும் கூட்டம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா தரப்பில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்றுள்ளார். இந்நிலையில், ராஜ்நாத்சிங்கை சந்திக்க வேண்டும் என சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் விய் ஃபென்ஹி கோரிக்கை விடுத்து இருந்தார்.  இந்த கோரிக்கையை இந்தியா ஏற்றுக்கொண்டது.  வெள்ளிக்கிழமை இரவு  ராஜ்நாத்சிங், விய் பென்ஹி இடையே சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது இருநாட்டு அதிகாரிகளும் உடன் இருந்தனர். இந்த சந்திப்பின் போது எல்லை விவகாரம் உள்ளிட்ட பல முக்கிய பிரச்சினைகள்  குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. லடாக் எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வலுத்து வரும் சூழலில் இந்தியா - சீனா பாதுகாப்பு அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை சர்வதேச அரங்கில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. 

"அமைதி நிலவ வேண்டுமானால் ஆக்கிரமிப்பு இருக்கக்கூடாது" - சீன ராணுவ அமைச்சர் முன்னிலையில் ராஜ்நாத்சிங் பேச்சு

ஷாங்காய் ஒத்துழைப்பு  கூட்டத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசும்போது, 
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இடம்பெற்றுள்ள 8 நாடுகளில் உலக மொத்த மக்கள்தொகையில் 40 சதவீதம்பேர் வசிக்கிறார்கள் என்றார். இத்தகைய பிராந்தியத்தில் அமைதியும், ஸ்திரத்தன்மையும், பாதுகாப்பும் நிலவ வேண்டுமானால், நம்பிக்கை, ஒத்துழைப்பு, ஆக்கிரமிப்பு இல்லாமை, சர்வதேச விதிமுறைகளை மதித்தல், கருத்து வேறுபாடுகளுக்கு அமைதி தீர்வு காணுதல், மற்றவர்களின் நலன்களை மதித்தல் ஆகியவை அவசியம் என அவர் குறிப்பிட்டார்.அனைத்துவகையான பயங்கரவாதத்தையும், அதை தூண்டி விடுபவர்களையும் சந்தேகத்துக்கு இடமின்றி இந்தியா கண்டிப்பதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்