அமெரிக்க அதிபர் தேர்தல் முறை எப்படி?

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில், அங்குள்ள தேர்தல் நடைமுறைகள் குறித்து காணலாம்..
x
ஜனநாயக நாடுகளில் குடியரசு தலைவர் அல்லது பிரதமர்  மக்களால் நேரடியாகவோ அல்லது எம் . பிக்கள் மூலமோ தேர்வு செய்யப்படுவார்கள்... ஆனால் அமெரிக்க அதிபர் தேர்தல் முறை இதர நாடுகளை போல நேரடியான வாக்களிப்பு முறை கொண்டதல்ல. அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர், தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் பெரும்பான்மை வாக்குகளை பெற்றால் மட்டும் வெற்றி பெற முடியாது. அமெரிக்காவில்  உள்ள  50 மாநிலங்களில் , ஒவ்வொரு மாநிலத்திலும் அதிபரை தேர்வு செய்யும் அவை ஒன்று  உள்ளது.  இந்த அவைகளில், பெரும்பான்மை  வாக்குகளைப் பெறுபவரே அதிபராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஒவ்வொரு  மாநிலத்துக்கும் அதன் வாக்காளர் எண்ணிக்கையைப் பொறுத்து இந்த தேர்வு செய்வோர் அவை உறுப்பினர்கள் ஒதுக்கப்படுகிறார்கள். உதாரணமாக மிக அதிக மக்கள் தொகையைக் கொண்ட கலிபோர்னியா மாநிலத்துக்கு 55 தேர்வு செய்வோர் அவை உறுப்பினர்கள் உள்ளனர். மிகச் சிறிய மாநிலமான ஐயோவா மாநிலத்துக்கு 6 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். பெரும்பாலான மாநிலங்களில், அந்த மாநிலத்தின் பெரும்பான்மை வாக்குகளைப்  பெறும் வேட்பாளருக்கு, அந்த மாநிலத்தின் அனைத்து அவை உறுப்பினர் இடங்களையும்  அளிக்கும் முறை உள்ளது. ஒரு சில மாநிலங்களில் மட்டுமே விகிதாச்சார நடைமுறை  இருக்கிறது. இந்த தேர்வு செய்வோர் அவைகளில் மொத்தம் 538 உறுப்பினர்கள் இருப்பதால் , அதிபர் தேர்தலில் வெல்ல வேண்டுமென்றால், இந்த அவையில் 270 வாக்குகளை பெறவேண்டும்.
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில், பொது மக்களின் மொத்த வாக்குகளில் ஹிலாரி கிளிண்டனுக்கு 47 புள்ளி7 சதவிகிதமும், டிரம்ப்புக்கு 47 புள்ளி 5 சதவிகிதமும் கிடைத்தன. ஆனால் தேர்வு செய்வோர் அவைகளின் வாக்குகளில் டிரம்ப் 290  வாக்குகளையும், ஹிலாரி கிளிண்டன் 228 வாக்குகளையும் வென்றனர். எனவே தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்று அதிபரானார் கடந்த 180 ஆண்டுகளில்  இதே போல் நான்கு தேர்தல்களில்  மட்டுமே  குறைவான வாக்குகள் பெற்றிருந்தாலும்  அதிகமான  அவை உறுப்பினர்  பெற்றவர் அதிபர் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது 

Next Story

மேலும் செய்திகள்