"கவுதம புத்தர் லும்பியினியில் பிறந்தவர்" - நேபாள அரசு அறிவிப்பு

கவுதம புத்தர் லும்பியினியில் பிறந்தவர் என நேபாள அரசு அறிவித்துள்ளது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கவுதம புத்தர் லும்பியினியில் பிறந்தவர் - நேபாள அரசு அறிவிப்பு
x
இது தொடர்பாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் லும்பியினியில் கவுதம புத்தர் பிறந்தற்கான தொல்லியல் ஆய்வுகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. எனவே  புத்த மதத்தின் நீரூற்றாக லும்பினியை உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாக யுனெஸ்கோ  அறிவிக்க வேண்டும் என நேபாள அரசு வலியுறுத்தியுள்ளது. ராமர் நேபாளத்தில் பிறந்தார் என அந்நாட்டு பிரதமர் ஷர்மா ஒலி அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், புத்தர் பிறந்த இடமும் நேபாளம் என்று அறிவித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நதிக்கரையில் சாகசம் செய்து அசத்தல் - அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய டாமினிக் 

அஸ்திரியா நாட்டின் , சால்ஸ்பெர்க் நகரில் உள்ள சுற்றுலா தலங்கள் வழியாக செல்லும் சால்செக் நதிக்கரையில் அலை சறுக்கு வீரர் டாமினிக் ஹெர்ன்லர் பல்வேறு சாகங்களை செய்து மக்களை வியப்பில் ஆழ்த்தினார்.


பெய்ரூட் துறைமுகத்தில் நடந்த வெடிவிபத்து விவகாரம் - லெபனான் அமைச்சர் மணல் அப்தெல் சமத் ராஜினாமா 

பெய்ரூட் துறைமுகத்தில் நடந்த வெடிவிபத்தை தொடர்ந்து லெபனான் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணல் அப்தெல் சமத் ராஜினாமா செய்துள்ளார். தலைநகர் பெய்ரூட்டில் நடந்த வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 150-ஐ கடந்துள்ளது. இந்த நிலையில் இதற்கு பொறுப்பேற்று, அமைச்சர் அப்தெல் சமத் ராஜினாமா செய்துள்ளார். இந்த விவகாரத்தில், லெபனான் அரசு மக்களை காக்க தவறிவிட்டதாகவும், அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.




Next Story

மேலும் செய்திகள்