இலங்கை பொது தேர்தல் - ராஜபக்சே கட்சி வெற்றி

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை பொது தேர்தல் - ராஜபக்சே கட்சி வெற்றி
x
160 தொகுதிகளில் நடைபெற்ற  பொதுத் தேர்தலில், இரவு 8.30 மணிவரை, 35 தொகுதிகளுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் 32 தொகுதிகளில் மகிந்த ராஜபக்ச அணி வெற்றி பெற்றுள்ளது. தமிழ் மக்கள் அதிகம் வாழும் ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டையான கண்டி, நுவரெலியா போன்ற மாவட்டங்களிலும் மகிந்த ராஜபக்சவின் கட்சி வெற்றிபெற்றுள்ளது. அதேபோல வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் கணிசமான வாக்குகள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு கிடைத்திருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட எந்த வேட்பாளரும் வெற்றி பெறாத நிலையில், அக்கட்சியில் இருந்து விலகி,தொலைபேசி சின்னத்தில் போட்டியிட்ட சஜித் பிரேமதாஸவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. புதிய நாடாளுமன்றம் வரும் 20ஆம் தேதி கூடும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தவாரத்தில் புதிய அமைச்சரவையும், பிரதமரும் பதவிப்பிரமாணம் செய்துகொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்