இலங்கை நாடாளுமன்ற தேர்தல் விறுவிறுப்பு - 80 % வாக்குகள் பதிவாகும் என எதிர்பார்ப்பு

இலங்கையில், நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக முதியவர்கள் உள்பட வாக்காளர்கள் சமூக இடைவெளியுடன் வாக்கு மையங்களுக்கு வந்து வாக்களித்து செல்கின்றனர்.
இலங்கை நாடாளுமன்ற தேர்தல் விறுவிறுப்பு - 80 % வாக்குகள் பதிவாகும் என எதிர்பார்ப்பு
x
இலங்கையில் ஒன்பதாவது நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 5 மணி வரை மக்கள் வாக்களிக்க உள்ள நிலையில், வாக்கு மையங்களில் விரிவான சுகாதார மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மக்கள்  சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வாக்களித்து செல்கின்றனர். யாழ் மாவட்டம் உள்பட​ இலங்கை முழுவதும் வாக்காளர்க​ள் எந்த விதமான அச்சம் இன்றி வாக்களித்து செல்கின்றனர். கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு 28 நாட்கள் தங்களை தனிமைப் படுத்திக் கொண்டவர்களுக்கு மட்டும் மாலை 4 முதல் 5 மணி வரை வாக்களிக்க இலங்கை தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. மொத்தமுள்ள 225 உறுப்பினர்களில் 196 பேரை, ஒரு கோடியே 60 லட்சம் வாக்காளர்கள் தேர்வு செய்ய உள்ளனர். மற்ற 29 உறுப்பினர்கள், கட்சிகள் பெற்ற வாக்குகள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இன்று பதிவான வாக்குகள் எண்ணும் பணி நாளை காலை 8 மணிக்கு தொடங்க உள்ள நிலையில், இரவுக்குள் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 12 ஆயிரத்து 985 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ள நிலையில், 80 சதவீத வாக்குகள் பதிவாகும் என தேர்தல் ஆணையம் எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தேர்தலில் இலங்கையில் உள்ள 22 தேர்தல் மாவட்டங்களில்,  20 அரசியல் கட்சிகள், 34 சுயேட்சை அமைப்புகள் சார்பில்  ஏழாயிரத்து 200 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மூன்றில் இரண்டு பங்கு வெற்றி கிடைக்கும் என கோத்தபய ராஜபக்ச நம்பிக்கை உடன் உள்ளதாக கூறப்படுகிறது. மூன்றில் இரண்டு பங்கு வெற்றி பெற்றால் தான், ஜனாதிபதிக்கான அதிகாரத்தை மீண்டும் கொண்டு வரும் வகையில், சட்ட திருத்தம் செய்ய முடியும் என்பதால், இன்றைய தேர்தல் இலங்கையின் தலைவிதியை நிர்ணயிக்கும் தேர்தலாக எதிர்பார்க்கப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்