பேச்சுவார்த்தை தோல்வி : "இனி யார் பேச்சையும் கேட்க போவதில்லை" - டிரம்ப் திட்டவட்டம்

ஆப்கானிஸ்தான் தாலிபன் தீவிரவாதிகளுடனான அமைதி பேச்சுவார்த்தை உயிரற்றதாகிவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தை தோல்வி : இனி யார் பேச்சையும் கேட்க போவதில்லை - டிரம்ப் திட்டவட்டம்
x
ஆப்கானிஸ்தான் தாலிபன் தீவிரவாதிகளுடனான அமைதி பேச்சுவார்த்தை உயிரற்றதாகிவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அண்மையில் தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் உயிரிழந்த‌தை சுட்டிக்காட்டியுள்ள டிரம்ப் அதில் ஒருவர் அமெரிக்க இளம் வீர‌ர் என்று குறிப்பிட்டுள்ளார். தாலிபன் விவகாரத்தில் யாருடைய அறிவுரையையும் தான் கேட்க போவதில்லை என்றும், தனக்கு தானே அறிவுரை கூறி கொள்வதாகவும், டிரம்ப் விளக்கம் அளித்துள்ளார். தாலிபான்கள் மிகப்பெரிய தவறை செய்துவிட்டதாகவும், அவர் குற்றம்சாட்டினார்.  


Next Story

மேலும் செய்திகள்