மயில் பச்சை நிறத்துக்கு மாறிய வானம் - வேற்று கிரகவாசிகளின் வருகை என பரவிய கருத்து

அமெரிக்காவின் நியூயார்க்கில் இரவு நேரத்தில் திடீரென வானம் மயில் பச்சை நிறத்துக்கு மாறியது.
மயில் பச்சை நிறத்துக்கு மாறிய வானம் - வேற்று கிரகவாசிகளின் வருகை என பரவிய கருத்து
x
அமெரிக்காவின் நியூயார்க்கில் இரவு நேரத்தில் திடீரென வானம் மயில் பச்சை நிறத்துக்கு மாறியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.  ஹாலிவுட் திரைப்படங்களில் வருவதைப்போல காட்சியளித்த இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த காட்சியை நேரில் பார்த்தவர்கள் சினிமா காட்சிகளுடன் ஒப்பிட்டு, வேற்று கிரகவாசிகளின் வருகையால் தான் இப்படி ஏற்படுகிறது என்றும், உலகின் இறுதி நாள் என்று  பல விதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஒரு டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறியதன் விளைவாக ஏற்பட்ட தீயால் தான் வானம் திடீரென மயில் பச்சை நிறத்துக்கு மாறியதாக போலீஸ் விசாரணையில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்