தமிழ் தேசிய கூட்டமைப்பு மீண்டும் உறுதி
பதிவு : நவம்பர் 08, 2018, 09:42 PM
ஒரே நாட்டில் இரு பிரதமர்கள் - இரு சபாநாயகர்கள் செயல்படும் சூழலில் அடுத்தடுத்து நிகழும் திருப்பங்களால் இலங்கையில் உச்சகட்ட குழப்பம் நீடித்து வருகிறது.
பரபரப்பான நிலையில் தலைநகர் கொழும்பில் முக்கிய நிகழ்ச்சி நடைபெற்றது. மஹிந்த ராஜபக்சே ஆட்சியை கவிழ்ப்பதற்காக மைத்திரிபால ஸ்ரீ சேனாவை அதிபர் தேர்தலில் போட்டியிடச்செய்வதற்கு தலைமை தாங்கிய மாதுளுவாவே சோபித்ததேரரின் 3 ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்காவும் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சிக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் செய்தித்தொடர்பாளர் சுமந்திரன், வருகிற 14 ம் தேதி, ராஜபக்சேவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் வாக்களிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என மீண்டும் உறுதிபட அறிவித்துள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.