இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படாது - இலங்கை அரசு தரப்பு திட்டவட்டம்

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக வெளியாகிய தகவலை இலங்கை அரசு மறுத்துள்ளது.
இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படாது - இலங்கை அரசு தரப்பு  திட்டவட்டம்
x
இலங்கையில் அடுத்தடுத்து திருப்பங்கள் நிகழ்ந்து வரும் சூழலில் அந்நாட்டின் நாடாளுமன்றம் இன்றிரவு கலைக்க திட்டமிட்டு உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் எம்பி அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த தகவலை வெளியிட்டார். 

இதுபோன்ற தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்றும், அடிப்படை இல்லாமல் இதுபோன்ற வதந்திகள் வெளியாகி இருப்பதாகவும் இலங்கை அரசின் மக்கள் தொடர்புத்துறை இயக்குநர், நாயகம் நாலக்க களுவேவ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தை கலைக்கும் முடிவுகள் எதுவும் அரசிடம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்