இந்தியா - மால்டா இடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியா - மால்டா இடையே சுற்றுலா, கடல்வழி ஒத்துழைப்பு உள்ளிட்ட 3 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்தியா - மால்டா இடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து
x
"ஒரு வாரம் அரசு முறை பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ள குடியரசு துணை துலைவர் வெங்கய்யா நாயுடுவுக்கு,, மால்டாவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அவரை,  மால்டா அதிபர் மரியே லூயிசே கொலீரோ நேரில் வரவேற்றார். பின்னர், மால்டா  அரசின் அணிவகுப்பு மரியாதையை வெங்கய்யா நாயுடு ஏற்றுக்கொண்டார். பின்னர் மால்டா அதிபர் மரியே லூயிசே கொலீரோவுடன், வெங்கய்யா நாயுடு  ஆலோசனை நடத்தினார். அப்போது, இந்தியா -  மால்டா இடையே சுற்றுலா, கடல்வழி ஒத்துழைப்பு உள்ளிட்ட 3 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 


Next Story

மேலும் செய்திகள்