மாற்று திறனாளி மாணவர்கள் தொடர்பான வழக்கு - பள்ளிக் கல்வித் துறை செயலாளர் ஆஜராக உத்தரவு

பள்ளி கட்டடங்களில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் எளிதில் அணுகும்வகையில் வசதிகள் ஏற்படுத்தக் கோரிய வழக்கில், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாற்று திறனாளி மாணவர்கள் தொடர்பான வழக்கு - பள்ளிக் கல்வித் துறை செயலாளர் ஆஜராக உத்தரவு
x
பள்ளி கட்டடங்களில்  மாற்றுத்திறனாளி மாணவர்கள் எளிதில் அணுகும்வகையில் வசதிகள் ஏற்படுத்தக் கோரிய வழக்கில், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் பள்ளி கல்வித்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில்,  தமிழகத்தில் 62 சதவீத பள்ளிக் கட்டிடங்கள் மாற்றுத் திறனாளி மாணவர்கள் எளிதில் அணுகும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு பாடம் நடத்த ஏதுவாக, நான்கு லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து, டிசம்பர் 23 ம் தேதி பள்ளிக்கல்வித் துறை செயலாளர் ஆஜராக உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்