ஃபார்ம்-டி படிப்பை துவங்க கோரி மனு- பார்மஸி கவுன்சில் பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

ஃபார்ம்-டி எனும் டாக்டர் ஆஃப் பார்மஸி படிப்பை துவங்குவது குறித்து பரிசீலிக்க, பார்மஸி கவுன்சிலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஃபார்ம்-டி படிப்பை துவங்க கோரி மனு- பார்மஸி கவுன்சில் பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
x
ராசிபுரத்தை சேர்ந்த பார்மஸி மற்றும் ஆராய்ச்சி கல்லூரி, ஃபார்ம்-டி படிப்பை 2020 - 21 ஆம்  கல்வியாண்டு முதல் தொடங்க அனுமதி கோரி, பார்மஸி கவுன்சிலுக்கு விண்ணப்பித்தது. ஆனால், பி-பார்ம் தொடங்கி 4 ஆண்டுகள் நிறைவடையவில்லை எனக் கூறி, ஃபார்ம்-டி படிப்புக்கு அனுமதி வழங்க பார்மசி கவுன்சில் மறுத்து விட்டது.  ஆனால், தற்போது பி-ஃபார்ம் வகுப்பு துவங்கி 4 ஆண்டுகள் நிறைவடைந்ததால், ஃபார்ம்-டி படிப்பை தொடங்க அனுமதி அளிக்க, பார்மஸி கவுன்சிலுக்கு உத்தரவிடக் கோரி கல்லூரி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கல்வி நிறுவனம் மீண்டும் அனுமதி கோரி  மனு கொடுக்கலாம் எனவும், அந்த மனுவை பார்மஸி கவுன்சில் சட்டத்திற்குட்பட்டு பரிசீலிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்