ரவுடி சங்கர் என்கவுன்டர் விவகாரம்- சிபிசிஐடி போலீசார் விசாரணை

சென்னை அயனாவரம், ரவுடி சங்கர் என்கவுன்டர் விவகாரத்தில் சங்கர் குடியிருந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் குடும்பத்தாரிடம் சிபிசிஐடி போலீசார் 4 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.
ரவுடி சங்கர் என்கவுன்டர் விவகாரம்- சிபிசிஐடி போலீசார் விசாரணை
x
சென்னை அயனாவரம் நியூ ஆவடி சாலையில் ஆகஸ்ட் மாதம்  21 ஆம் தேதி ரவுடி சங்கர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.  இது குறித்து சிபிசிஐடி போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு தினங்களுக்கு முன்பு சங்கர், நீலாங்கரையில் தங்கியிருந்த  வீட்டின் உரிமையாளர் சிவகுமார், அவரது மனைவி சங்கரி மகள் மற்றும் மைத்துனர்  என நான்கு பேரிடமும் சிபிசிஐடி போலீசார் நேரில் சென்று விசாரனை செய்தனர். அதன்பின்பு இன்று சிவகுமார் உள்ளிட்ட குடும்பத்தினர் 4 பேரும் எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில்  மதியம் 2 மணிக்கு ஆஜராகி மாலை 6 மணி வரை சிபிசிஐடி போலீசாரின்  கேள்விகளுக்கு பதிலளித்தனர் . இவை அனைத்தும் வீடியோவாக பதிவு செய்து எழுத்து பூர்வமாகவும் கையொப்பம், பெறப்பட்டது. மேலும் இந்த வழக்கில் சில மருத்துவர்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள்.  மேனகா உள்ளிட்டோரிடம் விசாரிக்க வேண்டியுள்ளதாக சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்