நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் - சீரமைப்பு பணியில் 4 தேசிய பேரிடர் மீட்பு குழு

நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் போர்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் - சீரமைப்பு பணியில் 4 தேசிய பேரிடர் மீட்பு குழு
x
நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக 300க்கும் மேற்ப்பட்ட இடங்களில் மண்சரிவு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு  மரங்கள் சாய்ந்துள்ளன.  இதனால் பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மரங்களை வெட்டி அகற்றும் பணிகள் போர்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.  நெடுஞ்சாலை துறையினர் ,  தீயணைப்பு படையினர்  மற்றும் தேசிய  பேரிடர் மீட்பு குழுவினர் சீரமைப்பு பணிகளில்  ஈடுப்பட்டுள்ளனர். சென்னையிலிருந்து வந்துள்ள 4 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்  சீரமைப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். ஊட்டி - குருத்துக்குளி சாலையில் சாய்ந்துள்ள மரங்கள் அகற்றப்பட்டு வருகிறது. 

சூறைக்காற்றால் சேதமடைந்த  புதிய தொகுப்பு வீடுகள் 

நீலகிரி மாவட்டத்தில் புதியதாக கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் மழை மற்றும் சூறைக்காற்றால் சேதமடைந்துள்ளன. கடந்த ஆண்டு மழை வெள்ளம் மற்றும் சூறைக்காற்றால் சேதமடைந்த வினோபஜி நகர் பகுதி மக்களுக்காக சுமார் 100 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. தற்போது வரை அந்த வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படாத நிலையில் தற்போது பெய்த மழை மற்றும் சூறைக்காற்றால் சேதமடைந்துள்ள. விரைவில் வீடு கிடைக்கும் என நம்பிய  மக்களுக்கு ஏமாற்றம்  ஏற்பட்டுள்ளது. 

ஊட்டியில் மின்தடை -  குடிநீர் விநியோகம் பாதிப்பு

ஊட்டியில் மின்தடை காரணமாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருவதால் 200-க்கும் அதிகமான இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. கடந்த 7 நாட்களாக மின்சார வசதி இல்லாததால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் ஊட்டி மக்கள் குடிநீர் இல்லாமல் அவதிக்கு உள்ளாகினர். மின்சாரம் இல்லாததால் கிராமம் 7 நாட்களாக இருளில் மூழ்கியது. சாய்ந்த மின் கம்பங்களை மின்வாரிய ஊழியர்கள் சீரமைத்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்