கபினி,கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து நீர் திறப்பு - ஒகேனக்கல்லில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து காவிரியாற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால், ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கபினி,கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து நீர் திறப்பு - ஒகேனக்கல்லில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்
x
காவேரி நீர்பிடிப்பு  பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், கர்நாடக அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளின் நீர்மட்டம் வேகமாக  உயர்ந்து வருகிறது. இதனால் இரு தினங்களுக்கு முன்பு கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 4,713 கன அடியும், கபினியிலிருந்து அதிகபட்சமாக வினாடிக்கு 50,600 கன அடி நீரும் காவிரி ஆற்றில், தமிழகத்திற்கு திறந்துவிட்டது. இந்த தண்ணீர்  தமிழக எல்லையான பிலிகுண்டுலுக்கு வந்தடைந்தது. இந்த நீர் ஒகேனக்கலை அடைந்த நிலையில்,   ஐந்தருவி, மெயின் அருவி, சினியருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

Next Story

மேலும் செய்திகள்