"தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் பரவி வருவது நல்லதல்ல" - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை

தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் பரவி வருவது நல்லதல்ல என வேதனை தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
x
நாட்டு துப்பாக்கியை பயன்படுத்தி கொள்ளையடித்த வழக்கில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, விசாரணைக்கு வந்தது. அப்போது,  குண்டர்கள், கிரிமினல்கள், அரசியல்வாதிகள் துப்பாக்கி உரிமம் வைத்திருப்பது சரியல்ல என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். துப்பாக்கி கலாச்சாரத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசுக்கு அவர்கள் உத்தரவிட்டனர். சட்டவிரோதமாக ஆயுதங்கள் விற்பனை செய்ததாக எத்தனை பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் எத்தனை பேருக்கு துப்பாக்கி உரிமம் வழங்கப்பட்டுள்ளது, உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்ததாக எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என கேள்வி எழுப்பினர். நக்சல்கள், சமூக விரோதிகளும், ஆயுதங்களை வைத்து சட்டம் ஒழுங்கு, மத பிரச்சனையை ஏற்படுத்துகின்றனரா எனவும் கேள்வி எழுப்பி நீதிபதிகள், உள்துறை செயலாளர், டி.ஜி.பி., காவல் ஆணையர் ஆகியோர் இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்