"கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கார்ப்பெட் விரிக்கும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை-2020-ஐ திரும்பப் பெற வேண்டும்" - ஸ்டாலின்

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கார்ப்பெட் விரிக்கும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை-2020-ஐ மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கார்ப்பெட் விரிக்கும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை-2020-ஐ திரும்பப் பெற வேண்டும் - ஸ்டாலின்
x
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு, கார்ப்பெட் விரிக்கும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை-2020-ஐ,  மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். மக்களின் நலனோ, சுற்றுப்புறச்சூழல் பற்றிய கவலையோ இந்த அரசுக்கு துளியும் இருப்பதாகத் தெரியவில்லை என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகை காட்டினால் யார் கேட்க முடியும்? என்ற "சர்வாதிகார" மனப்பான்மையுடன் மத்திய அரசு செயல்படுவதாக கூறியுள்ளார்.

தங்களுக்குக் கிடைத்த பெரும்பான்மையை பாஜக அரசு இப்படி பயன்படுத்துவது கண்டனத்திற்குரியது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வாக்களித்த மக்கள் இந்த அணுகுமுறையைப் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்றும், ஆகவே சுற்றுப்புறச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை - 2020-ஐ திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இயற்கை வளங்களையும், மக்களின் சுகாதாரத்தையும் பாதுகாத்திட மத்திய பா.ஜ.க. அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்திய ஸ்டாலின், இந்த அறிவிக்கையைத் தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிட்டு - மாவட்ட வாரியாக கருத்துக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்