கணவனை துடிக்க துடிக்க கொலை செய்த மனைவி - கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்ற கொடூரம்
பதிவு : ஜூலை 26, 2020, 08:33 PM
முறையற்ற உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை துடிக்க துடிக்க கொன்ற மனைவி மற்றும் அவரின் ஆண் நண்பரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை காட்டுப்பாக்கம் ஓம்சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் தரணிதரன். கார் ஓட்டுநர். இவரின் மனைவி பவானி. இவர்களுக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர். கடந்த 22 ஆம் தேதி தரணிதரன், கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டதாக கூறி கண்ணீர் விட்டு அழுதுள்ளார் அவரின் மனைவி. துப்பட்டாவால் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் கிடந்த தரணிதரனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், பவானியின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்தனர். கழுத்து இறுக்கப்பட்டு மரணம் நேர்ந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கை வரவும், பவானியின் செல்போனுக்கு அடிக்கடி ஒருவரிடம் இருந்து வந்த செல்போன் அழைப்பும் சந்தேகத்தை உறுதிபடுத்தியது. பவானியை போலீசார் சுற்றி வளைத்து விசாரித்த போது தான் நடந்த கொடூரங்கள் வெளியானது. தரணிதரனின் நண்பனான தினேஷ், அடிக்கடி இவர்கள் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். இருவரும் ஓட்டுநர்கள் என்பதால் அடிக்கடி ஒன்றாக சேர்ந்து மது அருந்துவதும் வாடிக்கையானதே. மனைவியை பிரிந்து வாழ்ந்த தினேஷூக்கு, நண்பனின் மனைவியான பவானி மீது காதல். இருவரும் நெருங்கிப் பழக இடையூறாக இருந்துள்ளார் தரணிதரன். காதல் கண்ணை மறைக்கவே, கணவனை தீர்த்துக் கட்ட முடிவெடுத்தார் பவானி. கடந்த 21 ஆம் தேதி பூச்சி மருந்து வாங்கி வந்து அதை உணவில் கலந்து தரணிதரனுக்கு கொடுக்குமாறு உத்தரவிட்டு சென்றுள்ளார் தினேஷ். காதலனின் வார்த்தையை ஏற்று பவானியும்  அதை செய்யவே, பூச்சி மருந்து பலன் அளிக்காமல்,  அடுத்த நாள் அதிகாலை எழுந்து காபியையும் குடித்துவிட்டு அரைத் தூக்கத்தில் இருந்துள்ளார் தரணிதரன். இதனால் அதிர்ச்சியடைந்த பவானி, தன் காதலன் தினேஷை வரவழைத்தார். 

இருவரும் சேர்ந்து தரணிதரனின் கழுத்தை துப்பட்டாவால் நெறித்து துடிக்க துடிக்க கொன்றுள்ளனர். பின்னர் கணவரே தற்கொலை செய்து கொண்டது போல செட்டப் செய்துவிட்டு வழக்கம் போல தங்கள் நாடகத்தை அரங்கேற்றி இருக்கின்றனர். நடந்த இந்த தகவல்களை எல்லாம் போலீசாரிடம் பவானி சொல்லவே, அவர்களே அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து பவானி, அவரின் காதலன் தினேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். விசாரணையின் போது தன் கணவனை எப்படி கொன்றேன்? என பவானி நடித்துக் காட்டியதும் அதிர்ச்சியின் உச்சம். 

குன்றத்தூர் சம்பவத்தில் அபிராமியின் வலையில் இருந்து கணவர் தப்பி, குழந்தைகள் உயிர் அநியாயமாய் போனது.. ஆனால் பவானி வழக்கில் பிள்ளைகள் தப்பிக்க, கணவனின் உயிர் கொடூரமாக போயிருக்கிறது... உயிரிழந்த தந்தை, சிறையில் தாய் என இருக்க பிஞ்சுக் குழந்தைகளின் வாழ்க்கை தான் இப்போது கேள்விக்குறியாகி இருக்கிறது....

தொடர்புடைய செய்திகள்

விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு கேரளா அரசு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கியது.

1173 views

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

451 views

கொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.

434 views

மகிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து - தேர்தலை திறம்பட நடத்தியதற்கு பாராட்டு

தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கு, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

125 views

பிற செய்திகள்

பாகனுடன் கொஞ்சி விளையாடி சேட்டைகளால் கவரும் குட்டி யானை அம்மு

ஊட்டி முதுமலையில் பாகனிடம் குழந்தை போல் விளையாடி சேட்டைகள் செய்யும் குட்டி யானை அனைவரையும் கவர்ந்துள்ளது.

21 views

"ரவுடி போல் நடந்து கொண்ட இளைஞர் கொலை" - 7 பேர் கொண்ட கும்பலை கைது செய்தது காவல்துறை

உறவினர் பெண்ணின் கள்ளத் தொடர்பை விட மறுத்து, ரவுடி போல் நடந்து கொண்ட இளைஞர், கழுத்தை அறுத்துக் கொலை கொலை செய்யப்பட்டார்.

17 views

குட்கா வழக்கு - இன்று மீண்டும் விசாரணை

சட்டப்பேரவைக்கு குட்கா எடுத்துச் சென்றது தொடர்பாக, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களின் வழக்கு விசாரணை இன்று நடைபெறுகிறது.

116 views

(13/08/2020) ஊர்ப்பக்கம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் 2 பேரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

30 views

திமுக VS பாஜக - கேலி செய்த தயாநிதிமாறன் - கூடா நட்பு கேடாய் முடியும் என விமர்சனம்

திமுக மற்றும் பாஜக இடையே தான் போட்டி என்ற வி.பி.துரைசாமியின் கருத்தை நகைப்புக்குரியது என்று தயாநிதி மாறன் கேலி செய்துள்ளார்.

984 views

"குட்கா பொருட்களை சட்டசபைக்கு எடுத்துச் சென்றது ஏன்?" - சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக தரப்பு வாதம்

குட்கா எளிதில் கிடைப்பதை அரசின் கவனத்துக்கு கொண்டு வரவே சட்டமன்றத்துக்கு குட்கா எடுத்துச் செல்லப்பட்டது என திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.