ஆதரவற்ற பிணவறை சடலங்களை தகனம் செய்ய கோரிய வழக்கு - அரசின் அறிக்கை மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி

அரசு மருத்துவமனை பிணவறைகளில் உள்ள ஆதரவற்ற சடலங்களை தகனம் செய்ய கோரிய வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கைக்கு உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
ஆதரவற்ற பிணவறை சடலங்களை தகனம் செய்ய கோரிய வழக்கு - அரசின் அறிக்கை மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி
x
சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ஜீவாத்மா கைங்கர்ய அறக்கட்டளை சார்பில் தொடரப்பட்ட வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், அனிதா சுமந்த் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது டிஜிபி, சுகாதாரத்துறை செயலாளர் சார்பில் தாக்கல் செய்த அறிக்கையில், 184 சடலங்கள் மட்டுமே இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு ஆட்சேபனை தெரிவித்த மனுதாரர் தரப்பு, 2 ஆயிரத்து 400 க்கு மேல் ஆதரவற்ற சடலங்கள் உள்ளதாகவும், மாநில குற்ற ஆவண பிரிவில் இதற்கான முழு விவரங்கள் இருப்பதாகவும் கூறினார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள்,  அரசு அதிகாரிகளின் அறிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்தனர். கூடுதல் அறிக்கையை தாக்கல் செய்ய டிஜிபி, சுகாதாரத் துறை செயலாளருக்கு உத்தரவிட்டு, விசாரணை ஜூன் 27ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்