கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க "ரோபோ" - அண்ணா பல்கலைக்கழகம் வடிவமைத்து வழங்கியுள்ளது

கொரோனா நோயாளிகள் மற்றும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு உதவக்கூடிய வகையில் பிரத்யேக ரோபோ ஒன்றை அண்ணா பல்கலைக்கழகம் வடிவமைத்துள்ளது.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ரோபோ - அண்ணா பல்கலைக்கழகம் வடிவமைத்து வழங்கியுள்ளது
x
வைஃபை வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோவை  500 மீட்டர் தொலைவிலிருந்து இயக்க முடியும்.இந்த ரோபோ நோயாளிகளின் உடல் நிலையை கண்காணிக்க மட்டுமின்றி அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் மருந்துகளை கொண்டு செல்ல,  கிருமிநாசினிகளை தெளிக்கவும் உதவுகிறது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது மருத்துவர்களும் செவிலியர்களும் நோய்த் தொற்றுக்கு ஆளாகி வருவதை தவிர்க்க இந்த ரோபோ பெரிதும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக எம்.ஐ.டி வளாகத்தில் பேராசிரியர் தியாகராஜன் தலைமையிலான ஆட்டோமொபைல் மின்னணு மற்றும் தகவல் தொடர்பியியல் துறையை சேர்ந்த குழுவினர் இந்த ரோபோவை வடிவமைத்துள்ளனர்..


Next Story

மேலும் செய்திகள்