கொரோனாவால் பாதிக்கப்பட்ட கற்றல் பணிகள் - பாடத்திட்டங்களை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை

கொரோனாவால் நடப்பாண்டு கற்றல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் கல்வியாண்டில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து சென்னையில் ஆலோசனை நடைபெற்றது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட கற்றல் பணிகள் - பாடத்திட்டங்களை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை
x
பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சிஜி தாமஸ் தலைமையில், 12 பேர் அடங்கிய குழுவை அமைத்து, கற்றல், கற்பித்தலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்ய, ஆய்வு செய்து, 15 நாளில் அறிக்கை அளிக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து  இக்குழுவின் முதல் ஆலோசனை கூட்டத்தில், 10 ம் வகுப்பு தேர்வு நடத்துவது, முடிவுகள் வெளியீடு என, பல்வேறு பணிகளும் தள்ளிப்போவதால், வரும் கல்வியாண்டில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என, கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. வழக்கமாக, ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் துவங்கும் நிலையில், இந்த ஆண்டு, ஜூலை 15ஆம் தேதிக்குப் பிறகே துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வரும் கல்வியாண்டில் பாடத்திட்டங்களை முழுமையாக நடத்த முடியாத நிலை ஏற்படுவதை கருத்தில்கொண்டு, பாடத்திட்டங்களை குறைப்பது, உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்