குடியுரிமை போராட்டங்களை தடுக்க கோரி புது வழக்கு - 11ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது உயர் நீதிமன்றம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் நடத்தி வரும் தொடர் போராட்டங்களை தடுக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கை மார்ச் 11ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்தது.
குடியுரிமை போராட்டங்களை தடுக்க கோரி புது வழக்கு - 11ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது உயர் நீதிமன்றம்
x
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் நடத்தி வரும் தொடர் போராட்டங்களை தடுக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கை மார்ச் 11ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்தது. சென்னை செங்குன்றத்தை சேர்ந்த சையது இப்ராஹிம் என்பவர் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவை, நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, இந்த விவகாரம் தொடர்பான வழக்கு மார்ச் 11 ஆம் தேதி விசாரணைக்கு வர இருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கை, நிலுவையில் உள்ள வழக்குகளுடன் சேர்த்து மார்ச் 11ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்