கொரோனா பாதிப்பு குறித்து வீடியோ கான்ஃபிரன்சிங் மூலம் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை

கொரோனா பாதிப்பு சிகிச்சைக்கென சிறப்பு வார்டு அமைக்க தனியார் மருத்துவமனைகள் முன்வர வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்
கொரோனா பாதிப்பு குறித்து வீடியோ கான்ஃபிரன்சிங் மூலம் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை
x
சென்னை தேனாம்பேட்டை, மருத்துவ இயக்குநகரத்தில் இருந்து, அமைச்சர் விஜயபாஸ்கர் மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் கொரோனா குறித்து கலந்துரையாடினார். அப்போது பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், சீனா, இத்தாலி, தென் கொரியா, ஈரான் ஆகிய நான்கு நாடுகளில் இருந்து வந்தவர்களின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறினார். வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்துள்ளவர்களை கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்ட விஜயபாஸ்கர், ஆம்புலன்ஸ்களை ஒரு முறை பயன்படுத்திய பின்னர் உடனடியாக சுத்தப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக சிறப்பு வார்டு ஏற்படுத்த வேண்டும் என அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். பொதுமக்கள் நோய் எதிர்ப்பு சக்தி உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும் எனவும் நோய் பாதிப்பு தடுப்பு நடவடிக்கை குறித்து பள்ளி - கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக் கொண்டார். 



Next Story

மேலும் செய்திகள்