"தமிழக பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கினாலும் நிதி போதாது" - கல்வி ஆர்வலர்கள் கருத்து

தமிழக பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கினாலும் உள்கட்டமைப்பு மேம்பாடு போன்றவற்றிற்கு அந்த நிதி போதாது என்று கல்வி ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழக பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கினாலும் நிதி போதாது - கல்வி ஆர்வலர்கள் கருத்து
x
தமிழக பட்ஜெட்டில், பள்ளி கல்வித்துறைக்கு அதிகபட்சமாக 34 ஆயிரத்து 181 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறை கூடுதலாக  5 ஆயிரத்து 581  கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கதக்கது என்று கல்வி ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால்  அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு இந்த நிதி போதாது என்றும் அவர்கள் 
தெரிவித்துள்ளனர். உயர்கல்வித்துறைக்கு 5,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருப்பது போதாது என்றும் கல்வி ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்

பட்ஜெட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பை அரசு பூர்த்தி செய்யவில்லை என குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யாதது ஏன் என ஜாக்டோ-ஜியோ அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. 

விலையில்லா பொருட்கள் வழங்க முக்கியத்துவம் அளிப்பதற்கு பதில்,  பட்ஜெட்டில் அரசு பள்ளிகளை மேம்படுத்த அதிக நிதி ஒதுக்கினால்  வரும் ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க செய்ய முடியும் என்பது கல்வியாளர்கள், ஆசிரியர்களின் கருத்தாக உள்ளது. 



Next Story

மேலும் செய்திகள்