கடலூரில் பெட்ரோலிய ஆலை அமைக்க ராமதாஸ் எதிர்ப்பு - நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு புற்று நோய் வரும் என கருத்து

கடலூர் மாவட்டத்தில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கடலூரில் பெட்ரோலிய ஆலை அமைக்க ராமதாஸ் எதிர்ப்பு - நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு புற்று நோய் வரும் என கருத்து
x
கடலூர் மாவட்டத்தில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் நடவடிக்கையை, தமிழக அரசு கைவிட வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 50 ஆயிரம் கோடி முதலீட்டில், பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கு  அமெரிக்காவைச் சேர்ந்த ஹால்தியா நிறுவனத்தோடு, முதலமைச்சர் ஆலோசனை நடத்தியிருப்பதாக  கூறியுள்ளார். இந்த ஆலை அமைந்தால்,  நிலத்தடி நீரில் டயாக்சின் என்ற வேதிப்பொருள்  கலந்து, புற்றுநோயை வரும் என தெரிவித்துள்ளார். எனவே இந்த திட்டத்தை தமிழக அசு கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்